துர்கா பூஜை கொண்டாட்டம்… படகுகள் கவிழ்து விபத்து… 5பேர் பலி..

மேற்கு வங்கம் மாநிலத்தில் நடந்த துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது பூஜைக்கு வைக்கப்பட்ட துர்கா சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.அப்போது எதிர்பாரதவிதமாக படகு கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
முர்ஷிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பெல்டங்காவில் துர்கா சிலை ஒன்றை ஆற்றில் கரைப்பதற்காக படகில் கொண்டு சென்றனர். அங்கு 2 படகுகளில் அந்த சிலையை வைத்து ஆற்றின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது திடீரென அந்த படகுகள் கவிழ்ந்தன. இதில் படகில் இருந்த 6 பேரும் நீருக்குள் சிலைக்கு அடியிலும் சிக்கிக்கொண்டனர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர். ஒருவர் மாயமாகி விட்டார். இது குறித்து தகவல் அறிந்த கவலர்கள் ஆற்றில் இறங்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்டனர். மேலும் மாயமானவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025