மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.! ஒருவர் கைது.!

மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில் ஒருவர் கைது.
மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றம் இழைத்தவர்களை தீவிரமாக தேடி வருவதாக அம்மாநில காவல்துறை விளக்கமளித்தது.
கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவாகியுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் 77 நாட்கள் ஆன பிறகு வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், மணிப்பூரில் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்ட வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேரதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெண்களை ஆடையின்றி ஒரு கும்பல் அழைத்துச்சென்ற நிலையில், இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்