சட்டை பையில் இருந்த செல்போன்…திடீரென ‘தீ’பற்றியதால் பரபரப்பு…நெஞ்சை பதற வைக்கும் வீடியோ.!!

கேரளாவில் 76 வயது நபர் சட்டைப் பையில் இருந்த மொபைல் போன் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக கேரளாவில் செல்போன்கள் வெடித்து தீப்பிடித்து வருகிறது. கடந்த வாரம், கோழிக்கோடு நகரில், கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன் வெடித்ததில், ஒருவர் தீக்காயமடைந்த சம்பவம் நடந்தது. அதைப்போல, இதற்கு முன், கடந்த ஏப்ரல் 24ம் தேதி, திருச்சூரைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, தான் பயன்படுத்திய மொபைல் போன் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், இன்று காலை கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் 76 வயது முதியவர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் ஒன்று வெடித்துத் தீப்பிடித்ததால் அவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். ஒரு மாதத்திற்குள் மாநிலத்தில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
அந்த 76 வயது முதியவர் இங்குள்ள மரோட்டிச்சல் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது இது நிகழ்ந்தது. இந்த சம்பவத்தின் காட்சிகள் வைரலாகி, வருகிறது. வீடியோவில் “முதியவர் கடையில் உள்ள மேஜையில் சாதாரணமாக அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டு இருக்கிறார். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த தொலைபேசி ஒலியுடன் வெடித்து தீப்பிடித்தது.
முதியவர் உடனடியாக குதித்து, தேநீர் கிளாஸைத் தட்டி, தனது பாக்கெட்டிலிருந்து தொலைபேசியை எடுக்க முயற்சிக்கிறார். தொலைபேசி அவரது சட்டைப் பையில் இருந்து தரையில் விழுந்தது, அவரது சட்டையில் சிறிய தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த ஹோட்டல் உரிமையாளர் முதியவருக்கு உதவி செய்து போனில் தீ எரிந்துகொண்டிருந்ததை பார்த்து தண்ணீர் ஊற்றி அனைத்தார். தொடர்ந்து 3-வது முறையாக கேரளாவில் போன் தீ பிடித்து தானாகவே எரிந்துள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் முதியவரின் சட்டைப்பையில் இருந்த மொபைல் போன் திடீரென்று வெடித்து தீப்பற்றி எரிந்தது. #Kerala #cellphone #Viral pic.twitter.com/CARLyuDoVx
— ♨️ மாவட்டம் ♨️ (@AJITH__AFC) May 19, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025