#Breaking : மீண்டும் முதல்வரானார் சித்தராமையா.! காங்கிரஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

Karnataka CM

கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

கர்நாடக தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், கர்நாடக முதல்வர் யார் என கடந்த 5 நாட்களாக தீவிர ஆலோசனை செய்து வந்ததது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இவர்கள் இருவருமே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புகளை அடுத்து, தற்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசுகையில், காங்கிரஸ் தலைமை கர்நாடக முதல்வராக சித்தராமையாவை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்