உத்தரகாண்ட் வேன் விபத்து : பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் முதற்கட்டமாக பேர் உயிரிழந்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரைடோலி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 23-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டு இருந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் என்று மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) வட்டாரம் முன்னதாக தகவலை தெரிவித்து இருந்தார்கள்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த சம்பவம் குறித்து விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவும் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025