கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு 2 வருடம் சம்பளம் வழங்கப்படும் என பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவை பொருத்தவரையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,கொரோனாவால் உயிரிழந்த மக்களுக்கு சில நிறுவனங்கள் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவளிக்கும் வகையில், பல உதவிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஜாஜ் ஆட்டோ 3 மற்றும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள்கொரோனா உயிரிழந்திருந்தால், அவர்களது குடும்பங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் ஊழியர்கள் குடும்பத்தின் குழந்தைகளின் கல்வி பொறுப்பையும் அவர்களை ஏற்றுக் கொள்வதாகவும், நிறுவனம் வழங்கும் மருத்துவ காப்பீடு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…