எங்களிடம் அரசு பேச வேண்டும்; அப்பொழுது தான் போராட்டம் முற்று பெறும் – விவசாயிகள் சங்க தலைவர்!

எங்களிடம் அரசு பேச வேண்டும், அப்பொழுது தான் போராட்டம் முற்று பெறும் என விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறியுள்ளார்.
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி அவர்கள் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், அறிவிப்புடன் நிறுத்தி விடாமல் அதை அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ராகேஷ் திகைத் அவர்கள், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பிறகும் அரசு விவசாயிகளிடம் பேச விரும்பவில்லை என தெரிகிறது.
எந்த அர்த்தத்தில் சட்டங்களை ரத்து செய்துள்ளார்கள் என்பதை தெளிவுபடுத்தி எங்களுடன் பேச வேண்டும், அப்பொழுது தான் நாங்கள் வீட்டுக்கு செல்வோம் என அவர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025