என்கவுண்டர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது..! காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம்..!

Published by
murugan
  • என்கவுண்டர் சம்பவம் காலை 05.45 மணி முதல்  06.15-க்குள் நடந்ததாக கூறினர்.பெண் மருத்துவர் பிரியங்கா செல்போன் உள்ளிட்ட பொருள்களை வைத்திருப்பதாகக் கூறி அதை எடுக்க அழைத்து வந்தோம்.
  • அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது என்கவுண்டர் செய்யப்பட்டது.
  • குற்றாவளிகள் நான்கு பேரை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது என சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27-ம் தேதி கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடு பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக  முகமது   , ஜொள்ளு சிவா , நவீன் , சென்ன கேசவலு ஆகிய  நான்கு பேரையும் போலீசார் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை  குற்றவாளி  நான்கு பேரையும் போலீசார் அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தப்பி செல்ல முயன்று உள்ளனர்.இதனால் போலீசார் தற்காப்புக்காக  நான்கு பேரையும் போலீசார்  என்கவுண்டர் செய்தனர்.

இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்.அதில் என்கவுண்டர் சம்பவம் காலை 05.45 மணி முதல்  06.15-க்குள் நடந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. பெண் மருத்துவர் பிரியங்கா செல்போன் உள்ளிட்ட பொருள்களை வைத்திருப்பதாகக் கூறி அதை எடுக்க அழைத்து வந்தோம்.அப்போது  4 பேரையும் அழைத்து சென்றபோது 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக சென்றிருந்தனர்.

சென்ன கேசவலு , முகமது ஆகியோர் எங்களுடைய  துப்பாக்கி எடுத்து மிரட்டினர். மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளும் கற்களைக் கொண்டு எங்களை தாக்கினர்.  குற்றவாளிகள்  நான்கு பேர்  தாக்கியபோது கூட போலீஸ் அமைதியாக இருந்து சரணடைய வேண்டும் என கூறினார்.

குற்றாவளிகள் நான்கு பேரை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது என சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் கூறியுள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

50 minutes ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

1 hour ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago