இந்தியா முழுவதும் 6 முதல் 8 வாரங்கள் முழு ஊடங்கு தேவை என்று இந்திய மருத்துவ ஆரய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வலியுறுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ படுக்கை வசதிகள்,ஆக்சிஜன் வசதிகள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
அதனால்,கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்ற சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து,கிராமப்புற பகுதிகளிலும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.மேலும்,தமிழ்நாடு,கேரளா,டெல்லி,மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் கொரோனா பரவல் 10 சதவிகிதத்திற்கும்மேல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,,நாடு முழுவதும் முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில்,”கிராமப்புறங்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அங்குள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் ரேபிட் ஆன்டிஜன் சோதனைகளை அதிக அளவில் நடத்த வேண்டும்.மேலும்,வைரஸ் தொற்று தேசிய அளவில் 21 சதவிகிதம் இருக்கும் நிலையில் சில மாவட்டங்களில் 42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
எனவே,நாடு முழுவதும் கொரோனா தொற்று 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்கள் முழு ஊடங்கு அவசியம் போட வேண்டும்.அதன்பிறகு,கொரோனா பரவல் குறையும் பட்சத்தில் படிப்படியாக தளர்வுகளை அந்தந்த மாநிலங்கள் அறிவித்துகொள்ளலாம்”,என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…