பிரதமர் மோடி – முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு நிறைவு!

பிரதமர் மோடி- தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது.
நேற்று பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி.டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.தற்போது பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது .சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக சந்திப்பு நடைபெற்றுள்ளது.பிரதமருடனான சந்திப்பு முடிந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார் முதல்வர் பழனிசாமி.