பாலியல் குற்றசாட்டு.. கைது செய்யாவிட்டால் உலக நாட்டு வீரர்களை நாடுவோம்.! வீராங்கனைகள் எச்சரிக்கை.!

பாலியல் குற்றச்சாட்டில் பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யாவிட்டால் மற்ற நாட்டு வீரர்களை நாடுவோம் என போராட்டத்தில் ஈடுபடும் வீராங்கனைகள் கூறியுள்ளனர்.
கடந்த 23 நாட்களாக டெல்லியில் பெண் குத்துசண்டை வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக எம்.பியும், குத்துசண்டை சம்மேள தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பல்வேறு பாலியல் குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்போது வரையில் சரண் சிங் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குபதிவு மட்டுமே செய்துள்ளனர். இதனால் சரண் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால், சர்வதேச அளவில் உள்ள வீரர்களிடம் இந்த பிரச்னையை எடுத்து சென்று உலகளாவிய பிரச்சனையாக மாற்றி விடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குத்துசண்டை வீராங்கனைகள் கூறி வருகின்றனர். மே 21க்கு பிறகு பெரிய முடிவு எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.