ரயில்களில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினாலோ அல்லது மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை பொதுவாக ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது.ஏனெனில்,குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்யும்போது பாட்டு பாடுவது,சத்தமாக பேசி மகிழ்வது , அரட்டை அடிப்பது என அனைத்திற்கும் ஏதுவாக இருக்கும்.எனினும்,அதே சமயம் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வதும் வழக்கமான ஒன்று.
இந்நிலையில்,ரயில்களில் பயணம் செய்வோருக்கான புதிய விதிமுறைகளை மத்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.அதன்படி,ரயில்களில் பயணம் செய்பவர்கள் சத்தமாக பேச மற்றும் மொபைல் போனில் அதிகம் சத்தம் வைத்து பாட்டு கேட்க ரயில்வே நிர்வாகம் தடை விதிதுள்ளது.இதனை மீறி,ரயில்களில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினாலோ அல்லது மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என்றும்,கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக சத்தமாக பேசுவது மற்றும் மொபைல் போனில் பாட்டு கேட்பது குறித்த புகார்களைப் பெற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.அந்த வகையில்,சக பயணிகளின் புகாரின் அடிப்படையில் இதுபோன்ற பயணிகள் மீது ரயில்வே நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,
இதற்கிடையில்,சமீபத்தில் இது தொடர்பாக இரண்டு வார சிறப்பு பயணத்தை மேற்கொண்டரயில்வே அதிகாரிகள்,பயணத்தின் போது,சக பயணிகளிடம் தொலைபேசியில் சத்தமாக பேசுவதையும்,இயர்போன் இல்லாமல் இசை கேட்பதையும் தவிர்க்கவும் படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…