கேரளா மாநிலம், திருவன்குளத்தை சேர்ந்தவர், ஐசக் மணி. கடந்த சில தினங்களாக வெளிஊர் சென்றார். வீடு திரும்பிய அந்த ராணுவவீரர் வீட்டில் பூட்டு உடைந்திருப்பதை பார்த்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் கூறியதாவது,
திருடன் ஒருவன், ஒரே நாளில் 6 இடங்களில் திருடுவதாக முடிவெடுத்துள்ளான். ஐந்து வீடுகளில் திருடிய அந்த திருடன், ஆறாவதாக ஒரு வீட்டிற்குள் திருட வந்துள்ளான். அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததும் அது ஒரு முன்னாள் ராணுவ வீரரின் வீடு என்பது தெரியவந்தது. இதனை அறிந்த அந்த திருடன், அந்த வீட்டின் இருந்த சரக்கில் ஒரு டம்பளர் குடித்து, கடிதம் ஒன்றை எழுதி வைத்து சென்றுள்ளான்.
அவன் எழுதிய கடிதத்தில், “இது ராணுவ வீரரின் வீடு என தெரிந்தால் வீட்டின் பூட்டை கூட உடைத்திருக்கமாட்டேன்”. மேலும் அதில் “திருடுவது தவறு” என கூறி, தான் திருடிய பையையும் அந்த ராணுவ வீரரின் வீட்டில் வைத்துவிட்டு காவல்துறைக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தான்.
அதில் அவன், “இந்த பையிலுள்ள பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடுங்கள்” எனவும் கூறினார். திருடன், காவல் துறையின் திசையை திருப்புவதற்காகவே அவன் இந்த செயலை செய்திருப்பான் என காவல் துறையினர் கூறினார்கள்.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…