மத்திய சட்டத்துறை இணை அமைச்சரும் மாற்றம் செய்து அறிவிப்பு!

SP Singh Baghel

சட்டத்துறை அமைச்சர் இன்று காலை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இணையமைச்சரும் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு.

மத்திய அமைச்சர்களின் துறைகளை இன்று மாற்றம் செய்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில், மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டார். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மத்திய சட்டத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.பி. சிங் பாகல் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இணையமைச்சரும் மாற்றப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்