இன்னும் 6 வாரங்களுக்கு தான் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் – மத்திய அரசு உறுதி!

Published by
Rebekal

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு பல மாநிலங்களில் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இன்னும் 6 வாரங்களுக்கு மட்டுமே தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் என மத்திய அரசு உறுதிபடக் கூறியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. 150 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது இந்திய நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தற்பொழுது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடும் திட்டம் அமலில் உள்ள நிலையில், இந்த தடுப்பூசி தட்டுப்பாடு மேலும், இடையூறாக உள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்துள்ள கோவிட் -19 பணி குழுவின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவம் வல்லுநருமான டாக்டர் என்.கே.அரோரா அவர்கள், இந்தியாவில் தடுப்பூசி தொடர்பான முடிவுகள் அனைத்தும் அறிவியல் ஆதாரங்களை பயன்படுத்தி எடுக்கப்படுவதாகவும், இந்த கொரோனா வைரஸ் சிலகாலம் இருக்கக் கூடியது தான் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம் எனவும், மக்கள் போதுமான அளவில் இதில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் முன்னோக்கி நடைபோடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். தடுப்பூசி பற்றாக்குறை என்பது அடுத்த ஆறு வாரங்களுக்கு மட்டும் தான் என்பதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன் எனவும், ஜூலை மாதம் முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி மாதமொன்றுக்கு 20 முதல் 25 கோடி டோஸ்கள் வரை அதிகரிக்கும் என தாங்கள் அறிந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தவிர்த்து ஜைடஸ் கேடிலா, ஸ்புட்னிக் வி, ஜான்சன் அண்ட் ஜான்சன்  மாதங்களில் பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago