இயற்கை பேரிடர் நமக்கு பெருத்த சோகத்தையும், நீங்கா வழிகளைக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் இது இயற்கை அன்னை நமக்கு கொடுத்த எச்சரிக்கையும் கூட.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா நதியில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான உமாபாரதி, உத்தரகாண்ட் சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் மத்திய அமைச்சராக இருந்தபோது கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகளில் மின் திட்டங்கள் குறித்து அமைச்சகத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டிந்தது. குறிப்பாக இமயமலையில் அமைந்துள்ள உத்தரகாண்டில் சென்சிட்டிவான பகுதி என அறிவித்து இருந்தோம். இந்த இயற்கை பேரிடர் நமக்கு பெருத்த சோகத்தையும், நீங்கா வழிகளைக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் இது இயற்கை அன்னை நமக்கு கொடுத்த எச்சரிக்கையும் கூட.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…