இனிமே ரூ.200 தான் டிக்கெட் விலை…குட் நியூஸ் சொன்ன கர்நாடக அரசு!
கர்நாடகாவில், சினிமா டிக்கெட் விலையை, 200 ரூபாய்க்கு மேல் நிர்ணயிக்க கூடாது என திரையரங்குகளுக்கு கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகா : இனிமேல் கர்நாடகாவில் வெளியாகும் அனைத்து மொழி படங்களுக்கு டிக்கெட் விலை ஒவ்வொரு திரையரங்குகளில் ரூ.200 ஆக இருக்கவேண்டும் என கர்நாடக அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த டிக்கெட் விலை வரியுடன் சேர்த்து ரூ.200 ஆக தான் இருக்கவேண்டும் என திட்டவட்டமாக திரையரங்குகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் அதேபோல வேறு மொழி திரைப்படங்கள் என ஒவ்வொன்றிற்கும் தனி தனியான விலையில் டிக்கெட் விலை இருந்தது. அதைப்போல, IMAX மற்றும் 4DX போன்ற பிரீமியம் வடிவங்கள் போன்ற இருக்கை கொண்ட தியேட்டர்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.
இதனையடுத்து இனிமேல், மல்ட்டிப்ளக்ஸ் மற்றும் அணைத்து திரையரங்குகளில் எந்த படங்கள் வெளியானாலும் டிக்கெட் விலை ரூ.200 ஆக தான் இருக்கவேண்டும் அந்த விலையை தாண்டி உயர்த்த கூடாது உயர்த்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் சித்தராமையா தனது பட்ஜெட் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தி பேசுகையில் “சில சலுகை பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து குடிமக்களுக்கும் சினிமாவை அணுகக்கூடிய ஒரு மலிவு கலாச்சார அனுபவமாக கர்நாடகாவை மாற்றுவதே எங்கள் நோக்கம்” என்றார். கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மற்றும் கர்நாடக திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் போன்ற தொழில் அமைப்புகள் இந்த ஒழுங்குமுறையை வரவேற்றுள்ளன. இது கன்னட மற்றும் பிற பிராந்திய மொழிப் படங்களைப் பார்க்க அதிக மக்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025