மதுரை : விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று த.வெ.க 2-வது மாநில மாநாடு?

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 - வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

vijayakanth and vijay

மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு மதுரை கூடக்கோவில் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்கான முதல் கட்டமாக, பந்தல்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றதும் தெரிந்தது தான். இந்த விழாவில் தவெகவின் பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த் கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து மாநாட்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், இந்த மாநாடு தவெகவின் அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல் எனக் கருதப்படுகிறது.

கட்சியின் முதல் மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தவெகவின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கைகளையும், மக்களுக்கான திட்டங்களையும் விளக்கியிருந்தார். இந்த இரண்டாவது மாநாடு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்த இரண்டாவது மாநாடு எந்த தேதியில் நடைபெறப்போகிறது என்பதற்கான எந்த தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, கட்சி தலைவர் விஜய் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி 2-வது மாநாட்டை நடத்திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 25-ஆம் தேதி தான் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் பிறந்த நாள். அந்த தேதியில் விஜய் தனது கட்சியின் 2-வது மாநாட்டை நடத்திட்டமிட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.

விஜயகாந்த் விஜயின் சினிமா வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் அவர் வளர்ச்சி அடைய சில உதவிகளை செய்துகொடுத்திருக்கிறார். எனவே, அவருடைய பிறந்த நாளுக்கு விஜய் மரியாதையை செய்யும் விதமாக இந்த மாநாட்டை அந்த தேதியில் நடத்தலாம் எனவும் கூறப்படுகிறது. அந்த தேதியில் விஜயகாந்தின் பிறந்த நாள் மட்டுமில்லை விஜயின் திருமணம் நாளும் அந்த நாள் தான். எனவே, அந்தநாள் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் சிறப்பான நாளாக இருந்த காரணத்தால் அவர் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கலாம். இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்