மார்ச் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக இந்திய ரயில்வே அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்தது. பின்னர், சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மே 1 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கத் தொடங்கின.
கொரோனா தொற்றுநோயை அடுத்து, ரயில்கள் புறப்பட திட்டமிடப்பட்ட 2 மணி நேரத்திற்கு முன்னதாக இரண்டாவது முன்பதிவு சார்ட் உருவாக்க மே 11 அன்று அறிவுறுத்தபட்டது. இதைத்தொடர்ந்து, இந்த நடைமுறை அமலில் இருந்தது.
இந்நிலையில், ரயில்வே மீண்டும் விதிகளை மாற்றியுள்ளது. அதன்படி, ரயில் புறப்படும் நேரத்திற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு தொடங்கி 5 நிமிடத்துக்கு முன்பு வரைஇரண்டாவது முன்பதிவு சார்ட் வெளியிடப்படுகிறது. ரயில் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்னதாக ரயில்வே முதல் முன்பதிவு சார்ட்டை வெளியிடப்படுகிறது.
மேலும், இரண்டாவது முன்பதிவு சார்ட் தயாராகும் வரை டிக்கெட் முன்பதிவு வசதி ஆன்லைன் மற்றும் டிக்கெட் கவுண்டர்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…