#டிக்டாக் # சீனாவிடமிருந்து வெளியேறுகிறதா??தடையால் (தடு)மாற்றம்!

Default Image

பிரபலமாக உலக நாடுகளில் எல்லாம் இயங்கி வந்த டிக்டாக் செயலி தனது தலைமை இடமான சீனாவை விட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

உலக முழுவதும்  டிக்டாக் செயலி அதிக பயனார்களை கொண்டு வலம் வந்தது சீனாவை  தலைமையிடமாக கொண்டு செயலப்பட்டு வரும் ஒரு  சீன நிறுவனமே  டிக்டாக் இதன் செயலியை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வந்தது.

சமீபத்தில் எல்லையில் அத்துமீறி நுழைந்தது மட்டுமின்றி இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை நியாயமின்றி கொன்றது சீனா இதனால் கடும் எதிர்ப்பானது அந்நாட்டிற்கு எதிராக இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்தது மட்டுமில்லாமல் சீன பொருட்கள் மீதும் எதிர்ப்பு வலுத்தது.

இந்நிலையில் தான் இந்தியாவுடன் லடாக் பகுதயில் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து  டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று  மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கவே அவற்றை இரவோடு இரவாக தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும்  உலக முழுவதும் பரவி உயிர்களை கொன்று குடித்து வரும் கொடூர கொரோனா வைரசை உலகம் முழுவதும் பரவுவதற்கு சீனா தான் காரணம் என்று  அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

இவ்வாறு கடும் எதிர்ப்பானது சீனாவிற்கு எதிராக உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ள நிலையில் அமெரிக்காவும் டிக்டாக் செயலிக்கு அந்நாட்டில் தடை விதித்து விட்டது.இதனை அதிகாரப்பூர்வமாகவே அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு எல்லை நாடுகள் மட்டுமின்றி சர்ச்சையாக உள்ள ஹாங்காங்கிலும் சீனா கடுமயைான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் அங்கும் டிக் டாக் நிறுவனம் தனது நடவடிக்கையை வாபஸ் பெற்றுள்ளது

லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், லண்டன்,டப்ளின், சிங்கப்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் ஏற்கனவே  டிக் டாக் நிறுவனம் அலுவலகங்களை கொண்டு உள்ளது.

இந்தியாவிலும் மற்றும் அமெரிக்காலும்  தடை உத்தரவு நடவடிக்கை காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் வருவாய் தற்போது குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.இதனால் தன் மீதான களங்கத்தை மாற்றும் நடவடிக்கையாக அதன் தலைமையகத்தை சீனாவில் இருந்து வேறு ஒரு நகரத்திற்கு மாற்றுவது  குறித்தும்புதிய நிர்வாக குழுவை உருவாக்குவது குறித்தும், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒரு தளத்தை உருவாக்கவும் , அதன் மூலம் பயனாளர்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் சீன நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 06042025
War Mock Drill in India
BJP Lady Person murder in Pattukottai Tanjore district
MIGM Exp successfully tested by NAVY and DRDO
Vadakadu Riot - Pudukottai Police
SRHvDC - IPL2025
Hyderabad vs Delhi