கேரளாவில் 84 வயது மூதாட்டிக்கு 30 நிமிட இடைவெளிகளில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவின் தீவிரத்தை குறைக்கும் விதமாக நாடு முழுவதிலும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி இரண்டு டோஸாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், பல பகுதிகளிலும் தவறுதலாக சரியான கால இடைவெளியின்றி தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அதேபோல தற்போது கேரளாவிலும் 84 வயது மூதாட்டி ஒருவருக்கு 30 நிமிட இடைவெளிகளில் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அந்த மூதாட்டி தடுப்பூசி செலுத்த சென்றதாகவும், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் பாதுகாப்பிற்காக ஒரு மணிநேரம் மருத்துவமனையிலேயே உட்கார வைக்கப்பட்டு இருந்த மூதாட்டிக்கு, மீண்டும் அடுத்த டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதன் விளைவாக மூதாட்டிக்கு உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பது குறித்தும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…