மத்திய பட்ஜெட் 2024: எந்தெந்த துறைக்கு கூடுதல் நிதி? புதிய சலுகைகள் கிடைக்குமா?

union budget 2024

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், 2024-25ம் நிதி ஆண்டிற்கான மத்திய படஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். இதன்மூலம், தொடர்ந்து 5வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பெருமையை பெறப் போகிறார். நடப்பாண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில், இது முழுமையான பட்ஜெட்டாக இருக்காது.

தேர்தல் முடிந்து ஆட்சி பொறுப்பேற்கும் அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்யும். அந்த வகையில், மே 2024க்கு பின்னர் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில், பிப்.1ம் தேதி தாக்கல் செய்யவுள்ள மத்திய பட்ஜெட்டில், சில துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், மத்திய அரசுக்கு வருமான வரி, ஜிஎஸ்டி, நிகர வரி வசூல் உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதில், குறிப்பாக இடைக்கால பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் சமூக திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

பட்ஜெட்டில் இது நடந்தால் தங்கம், வைரம் விலை குறையும்..!

இதுபோன்று, வருமான வரித்துறையில் பல்வேறு சாத்தியமான சீர்திருத்தங்கள் இருக்கும் என்றும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி சார்ந்து வரிச் சலுகை, மானியம் மற்றும் இதர ஊக்கத்தொகை போன்ற சலுகைகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. அதுமட்டுமில்லாமல், ரயில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெறவும் வாய்ப்பு உள்ளது.

மேலும், டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியும், அறிவிப்புகள் எதிர்பார்க்கலாம். அதேபோல், காலநிலை மாற்றத்தின் கவலைகள் அதிகரித்து வருவதால், தனிநபர்கள் மற்றும் வணிகர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதற்கான ஊக்குவிப்புகள் அறிமுகப்படுத்தலாம். அதேவேளையில் சிறுகுறு நிறுவனங்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதுபோன்று, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சூழலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள் இருக்கலாம். வணிகர்களுக்கும், தனிநபர்களுக்கும் வரி செலுத்தும் முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், பலவேறு கவர்ச்சிகரமான அறிவுப்புகள், சலுகைகள் இடப்பெறும் என்பதால் பொதுமக்களுக்கு மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்