மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் வீடு திரும்புவார் – எய்ம்ஸ் மருத்துவமனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முற்றிலும் குணமடைந்தார், விரைவில் வீடு திரும்புவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடத்த 2 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய பல அரசியல் தலைவர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். விரைவில் மீண்டு வர வாழ்த்தையும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, அமித்ஷா தனக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்திருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், மருத்துவர்கள் ஆலோசனையில் மருத்துவமனையில் இருந்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து இன்று அமித்ஷா நலமுடன் உள்ளார் என்றும் ஓய்வும், சிறப்பு கவனிப்பும் தேவைப்படுவதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார் எனவும் ள்துறை அமைச்சகம் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில, தற்போது கொரோனா குணமான நிலையிலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார் அமித்ஷா, முற்றிலும் குணமடைந்துள்ளார் என்றும் கூடிய விரைவில் வீடு திரும்புவார் எனவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025