தொழில் தொடங்க இந்தியாவுக்கு வாங்க.. ஜப்பான் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் மத்திய அமைச்சர்.!

Mansukh Mandaviya

இந்தியாவில் தொழில் செய்ய வருமாறு ஜப்பான் மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்தார்.

ஜப்பான் நாட்டு மருத்துவத்துறை நிறுவன பிரதிநிதிகளுடன் டோக்கியோவில், மத்திய மருத்துவத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடலில் ஈடுப்பட்டார். அப்போது அவர்களை இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.

மருத்துவத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் துறையானது இந்தியாவின் சுகாதாரத் துறையின் இன்றியமையாத துறையாகும். பெரிய அளவிலான மருத்துவ சாதனங்கள் மற்றும் மருத்துவ சோதனை கருவிகள் மூலம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய கோவிட் தொற்று காலத்தை இந்தியா எதிர்கொண்டது.

மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் துறையானது தற்போது 11 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. அது வரும் 2030-க்குள் நான்கு மடங்கு வளர்ச்சி அடையும் என்ற சாத்தியகூறுகள் உள்ளது என்றும் அமைச்சர் மாண்டவியா ஜப்பான் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில்,’ புதுமையான முன்னேற்றங்களுடன், மருத்துவ சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப துறையில் உலக அரங்கில் முன்னேறுவதற்கான ஒரு முக்கியமான பயணத்தில் இந்தியா தற்போது உள்ளது என்றும், ஜப்பானிய மருத்துவ சாதன தயாரிப்பு நிறுவனங்கள் இவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கூறி மத்திய மருத்துவத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்