உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெறும் சார் தாம் யாத்திரைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சார் தாம் யாத்திரை என்பது உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி ஆகிய நான்கு கோயில்களுக்கும் யாத்திரை செல்வது ஆகும். வழக்கம் போல் இந்த ஆண்டும் இந்த யாத்திரையை நடத்த அம்மாநில அரசு முடிவெடுத்தது.
இது குறித்து இன்று உத்தரகண்ட் உயர் நீதிமன்றம், சார் தாம் யாத்திரை மீதான தடையை நீக்கி கொரோனா நெறிமுறைகளுடன் பக்தர்களை கோவிலுக்கு செல்ல அனுமதித்துள்ளது. ஒரு நாளில் கேதார்நாத் டாமில் 800 பக்தர்களும், பத்ரிநாத் டாமில் 1200 பேரும், கங்கோத்ரியில் 600 பக்தர்களும், யமுனோத்ரி டாமில் 400 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பக்தர்களுக்கு கட்டாயமாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இரட்டை தடுப்பூசி சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…