குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா.! காரணம் என்ன.?

உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Jagdeep Dhankhar

டெல்லி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் காரணங்களை குறிப்பிட்டுள்ளார். அவரது ராஜினாமா அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில், “மருத்துவ ஆலோசனையை பின்பற்றி, உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி, குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக” தெரிவித்தார்.

74 வயதான ஜகதீப் தன்கர், 2022 ஆகஸ்ட் முதல் குடியரசு துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். அவரது பதவிக்காலம் 2027 வரை இருந்தது. இவரது ராஜினாமா, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், எதிர்பாராத விதமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, குடியரசு துணைத்தலைவர் ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த துணைத் தலைவர் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட திட்டமா? அல்லது பிரதமர் மோடியின் 75 வயது குறித்த கேள்விகளை எழுப்பி வரும் முக்கிய நிர்வாகிக்கு வாய்ப்பா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

ஜெகதீப் தன்கர், மருத்துவ காரணங்களாக தனக்கு இதய பிரச்சனைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் கடந்த மாதம் நைனிடால் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் மய HX-இல் மயக்கமடைந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெகதீப் தன்கரின் பதவி விலகல், இந்தியாவின் மூன்றாவது குடியரசு துணைத் தலைவர் பதவியை முடிக்காமல் விலகிய சம்பவமாகும். முன்னதாக, வி.வி. கிரி (1969) மற்றும் ஆர். வெங்கட்ராமன் (1987) ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகியிருந்தனர்.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67-ன்படி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு மற்றொரு தேர்தல் ஆறு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். அதுவரை, மாநிலங்களவையின் துணைத் தலைவர் அல்லது குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் மாநிலங்களவையின் பணிகளை கவனிப்பார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்