பழங்குடியினர் போராட்டத்தின்போது மணிப்பூரில் வெடித்த வன்முறை…5 நாட்களுக்கு 144 தடை.!

Manipur protest

மணிப்பூரில் பழங்குடியினரின் போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால், ஐந்து நாட்களுக்கு மணிப்பூரில் 144 தடை.

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் நடத்திய போராட்டத்தின் போது சுராசந்த்பூர் மற்றும் பிஷ்ணுபூர் இடையே காங்வாய் பகுதியில் பதற்றம் அதிகரித்ததன் காரணமாக அப்பகுதியில் வன்முறை வெடித்தது. இதனால் மணிப்பூரின் அனைத்து மாவட்டங்களிலும் இணையம் தடை மற்றும் அடுத்த ஐந்து நாட்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான மெய்தி சமூகத்தை பழங்குடியினர் பட்டியல் (ST) பிரிவில் சேர்க்க எடுக்கப்பட்ட முடிவுகளை எதிர்த்து, அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM) சார்பில் ‘ஒற்றுமை அணிவகுப்பில்’ ஆயிரக்கணக்கான பழங்குடியினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடுவது, சட்டத்திற்குப் புறம்பாக உரிமம் இல்லாமல் குச்சிகள், கற்கள், துப்பாக்கிகள், ஆயுதங்கள் அல்லது அபாயகரமான ஆயுத பொருள்களை எடுத்துச் செல்வது உள்ளிட்ட தடை செய்யப்பட்ட செயல் வன்முறை வெடித்ததற்கு உடனடி விளைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வன்முறையால் சுராசந்த்பூர், மலை மாவட்டம் மற்றும் அண்டை பள்ளத்தாக்கு மாவட்டமான பிஷ்னுபூரின் சில பகுதிகளில் தீவைப்பு மற்றும் கல் எறிதல் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகியுள்ளன. பல வீடுகள் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, மேலும் மோதலில் சிலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், தனது ட்விட்டரில் தயவு செய்துஉதவுங்கள், எனது மாநிலம் மணிப்பூர் எரிகிறது, என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்