இன்னும் சற்று நேரத்தில் மனோபாலா உடல் தகனம்.!

நடிகர் மனோபாலா உடல் இன்னும் சற்று நேரத்தில் தகனம் செய்யப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட மறைந்த நடிகர் மனோபாலாவின் உடல் இன்னும் சற்று நேரத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது உடலுக்கு, நெருங்கிய உறவினர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தொடர்ந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.
அவரின் உடல், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம் வழியாக கேசவர்தினி பேருந்து நிறுத்தம் அருகே வளசரவாக்கத்தில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளது.
நடிகரும், இயக்குனருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனோபாலா, நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025