ஓட்டு பதிவு இயந்திர விவகாரம்…மீண்டும் ஓட்டுச்சீட்டா… அதிரடி காட்டிய தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு…

Default Image

இந்தியாவில் நடக்கும் போது தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி வரும்  தேர்தல்களில் இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக முன்பு இருந்தது போல ஓட்டுச்சீட்டு பயன்படுத்த வேண்டும் என்றும், அது இருந்தால் மட்டுமே வாக்குப்பதிவில் நம்பகத்தன்மை அதிகரிக்கும் எனவும் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. இந்நிலையில் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைநகர் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், பங்கேற்று பேசியதாவது,  ஒரு காரை போல, பேனாவை போல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எளிதில், சேதப்படுத்திட முடியாது.இந்த இயந்திரங்களை ஹேக் செய்யவோ, அல்லது தகவல்களை மாற்றியமைக்கவோ முடியாது. கடந்த 20 ஆண்டுகளாக மின்னணு இயந்திரங்கள் தான் நடைபெற்ற தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில், மீண்டும் பழைய முறையில் ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கு இடமில்லை என்றும்,  உச்ச நீதிமன்றம்  இயந்திரத்தை பயன்படுத்த சம்மதித்துள்ளது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting