அடுத்தாண்டு மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா பிரச்சாரத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று அதிகாலை 1 மணியளவில் கொல்கத்தா வந்தடைந்தார்.
நேற்று பாஷிம் மெட்னிப்பூர் பேரணியில் பேசிய, உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களுக்கு மேல் வென்று ஆட்சியை அமைக்கும் என்று தெரிவித்தார். இன்று அமித் ஷா தனது இரண்டு நாள் பயணத்தின் போது, முதன்முதலில் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.
அங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் , அமித் ஷா பிர்பம் மாவட்டத்தில் உள்ள போல்பூர் நகரில் மக்களிடம் பேசினார். அமித் ஷா வருகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள் முகுல் ராய் மற்றும் பலரின் பெரிய கட்அவுட்கள் போல்பூர்-சாந்திநிகேதன் சாலையில் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…