மேற்கு வங்கத்தில் கடுமையான சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சலால் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமே தற்பொழுது வரை குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு குழந்தைகள் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.
அதிலும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் கடுமையான சுவாசப் பிரச்சனை மற்றும் காய்ச்சல் காரணமாக இதுவரை 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சுவாசப் பிரச்சனை காரணமாக 56 குழந்தைகள் இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 27 குழந்தைகள் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்குமே காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாசப் பிரச்சனை இருப்பதாகவும், உயிரிழந்த குழந்தைகள் அனைவருக்கும் கொரோனா தொற்று அறிகுறியும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…