மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரிக்கு கொல்கத்தா சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பாஜக எம்எல்ஏவும், மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்த வழக்கில், விசாரணை நடத்த மாநில குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், சுவேந்து அதிகாரி நாளை காலை சிஐடி போலீஸார் அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்க நந்திகிராம் பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி சுப்ரபிரதா சக்கரவர்த்தி கடந்த 2018ம் ஆண்டு, தனது சர்வீஸ் ரிவால்வரை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக கூறப்பட்டது. சக்கரவர்த்தியின் மனைவி தனது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
விசாரணையின் ஒரு பகுதியாக 11 போலீசார் உட்பட 15 பேரை சிஐடி இதுவரை விசாரித்த நிலையில், தற்போது சுவேந்து அதிகாரிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகும்படி கொல்கத்தா சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…