பதவியை இராஜினாமா செய்தார் மேற்குவங்க மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர்!

மேற்கு வங்க மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சமி ரத்தன் சுக்லா அவர்கள் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற இடதுசாரி கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பலமிழக்கச் செய்யும் வகையில் வலைவீசி தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகிறது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் பிற கட்சிகளுக்கு சென்றுள்ளது. மம்தா பானர்ஜிக்கு கடும் பின்னடைவை கொடுத்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் போக்குவரத்து துறை அமைச்சர் சுவேந்து அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சமி ரத்தன் சுக்லோ அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனது ஹவுரா மாவட்ட தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அவரது எம்எல்ஏ பதவியை இன்னும் அவர் ராஜினாமா செய்யவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரக் கூடிய நிலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கியமான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் பிற கட்சிகளுக்கு செல்வதும் பதவியை ராஜினாமா செய்வதும் தொடர்ந்து கொண்டிருப்பதால் மம்தா பானர்ஜிக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025