இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தால் அல்லது எளிதில் பாதிக்கப்பட கூடிய மக்களுக்கு வேகமாக பரவினால் மூன்றாம் அலை ஏற்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
கொரோனா மூன்றாம் அலை பாரவல் எப்போது ஏற்படும் என மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், தற்பொழுது நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டாலும் கூட பாதிப்பு குறைவாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தாலோ அல்லது எளிதில் பாதிக்கக்கூடிய மக்களுக்குக் கொரோனா தொற்று அதிகம் பரவுவதாலும் தான் மூன்றாம் அலை ஏற்படும் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வந்தாலும், இதற்கான அறிவியல் ஆதாரம் உலகம் முழுவதும் இல்லை எனவும், அப்படியே குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் சிறிய அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு குணமடைந்து விடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
மேலும், குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய மருத்துவ உதவிகளை மத்திய அரசு ஏற்கனவே விதிமுறைகளாக வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள கொரோனா பரவல் தரவுகளின் அடிப்படையில் மத்திய அரசு மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…