ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

இந்தியாவின் வெற்றிகரமான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர்கள் கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் ஆவர்.

Sofiya Qureshi - Vyomika Singh

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்” என்று இந்தியா அறிவித்துள்ளது. கட்சி பாகுபாடின்றி அனைத்து எதிக்கட்சிகளும் இந்திய ராணுவத்தின் இந்த பதிலடிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து இன்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்திய இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி உடன் இந்திய ராணுவத்தின் ‘லெப்டினன்ட் கர்னல்’ சோஃபியா குரேஷி மற்றும் இந்திய விமானப்படையின் ‘விங் கமாண்டர்’ வ்யோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கினர்.

யார் இந்த ‘லெப்டினன்ட் கர்னல்’ சோஃபியா குரேஷி & ‘விங் கமாண்டர்’ வ்யோமிகா சிங்? என்று பார்க்கலாம்.

கர்னல் சோபியா குரேஷி

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்த 2 பெண்களில் ஒருவர் கர்னல் சோபியா குரேஷி. 44 வயதாகும் இவர், குஜராத்தை சேர்ந்தவர். இந்திய ராணுத்தில் சோஃபியா 1999-ல் பணியில் சேர்ந்தார். சோஃபியாவை திருமணம் செய்துகொண்டவரும் ஒரு ராணுவ வீரரே.

ராணுவக் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரின் தாத்தா, அப்பா, கணவர் என அனைவருமே ஆர்மியில் இருந்தவர்கள், இருப்பவர்கள். சோஃபியா, ஐநாவின் அமைதி குழுவில் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கடந்த 2006-ல் காங்கோவில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்ட குழுவில் இடம்பிடித்தார்.

2016ஆம் ஆண்டு 18 நாடுகள் பங்கேற்ற Exercise Force 18 அணிவகுப்பு ஒத்திகையில் இந்திய ராணுவத்தை வழிநடத்தியவர். அந்த ஒத்திகையில் இந்திய அணியை வழி நடத்திய ஒரே மற்றும் முதல் பெண் அதிகாரி சோஃபியாதான். லெப்டினன்ட் கர்னல் சோஃபியா குரேஷி, ஒரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவக் குழுவிற்கு தலைமை தாங்கிய முதல் முஸ்லிம் பெண் அதிகாரி ஆவார். கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் பிரிவில் சோஃபியா தற்போது அதிகாரியாக இருக்கிறார்.

வியோமிகா சிங்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஊடகத்தினருக்கு விளக்கம் அளித்த மற்றொருவர் விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங். 6-ஆம் வகுப்பில் இருந்தே பறக்க விரும்பியவர். பொறியியல் படித்துவிட்டு இந்திய விமானப் படையில் ஹெல்காப்டர் பைலட்டாக 2019ல் பணியில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் விளக்கங்கள் சொன்ன வியோமிகா சிங், இஞ்சினியரிங் பட்டதாரியான இவர், திறமையான ஹெலிகாப்டர் பைலட். இந்திய எல்லையின் மலை முகடுகளுக்கு மேலே 2,500 மணிநேரம் பறந்த அனுபவம் மிக்கவர்.

ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் 2,500 மணி நேரம் ஹெலிகாப்டரில் பறந்துள்ளார். விமானப்படையில் உள்ள செட்டக், சீட்டா ஹெலிகாப்டர்களை இயக்கும் திறமை பெற்றவர். 2020 நவம்பரில் அருணாச்சல பிரதேசத்தில் பனியில் சிக்கியவர்களை மீட்க உதவியவர். கடல் மட்டத்தில் இருந்து 21,650 அடி உயரத்தில் உள்ள மணிரங் மலையேறிவர்.

வீர உரையாற்றிய சிங்கப்பெண்கள்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. தாக்குதல் தொடர்பான விபரங்களை இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரேசி, இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் பகிர்ந்தனர்.

பஹல்காமில் தீவிரவாதிகள் ஆண்களை குறி வைத்து கொலை செய்தனர், நெற்றி பொட்டுக்கு அருகே துப்பாக்கியை வைத்து சுட்டு கொலை செய்தனர். இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகள், பாகிஸ்தானை பந்தாட ‘எங்கள் ஊர் பெண்களே போதும்’ என்ற செய்தியை நேரடியாக சொல்வது போல் உள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரின் மூலம் பெண்களின் திலகத்தை அழித்த தீவிரவாதிகளை பந்தாடி, தாக்குதல் குறித்த விபரங்களை பெண் அதிகாரிகள் மூலமே தெரிவித்துள்ளது. முதன் முறையாக பெண் அதிகாரிகளை வைத்து விளக்கம் கொடுத்திருக்கிறது இந்தியா என்பது கவனிக்கத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்