மணிப்பூர் விவகாரத்தில் பாஜக விளக்கம் அளிக்காமல் இருப்பது ஏன்..? – கனிமொழி எம்.பி

நாடாளுமன்றத்தில் நேற்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து திமுக எம்.பி கனிமொழி அவர்கள் பேசினார். அப்போது பேசிய அவர், உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு மாநிலத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டபுள் எஞ்சின் அரசு என பெருமை பேசும் பாஜக மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் அளிக்காதது ஏன்? மணிப்பூருக்கு பிரதமர் ஏன் செல்லவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மணிப்பூரில் முகாம்களில் தங்க வைப்பட்டுள்ள மக்கள் மிகவும் அவலமான நிலையில் உள்ளனர். மணிப்பூர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை, மணிப்பூர் முதல்வரோ, பிரதமரோ ஏன் காண வரவில்லை என சிறுமி கேள்வி கேட்டாள். மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறையினர் எந்த உதவியும் செய்யவில்லை. காவல்துறையினர் அதிகமாக இருந்து மணிப்பூரில் வன்முறையை தடுக்கவில்லை.
எங்களை ஹிந்தி படிக்க சொல்வதை விட, நீங்கள் சிலப்பதிகாரம் படியுங்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டிய மன்னன் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா? புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்தீர்கள். சாதாரண மக்களை கைவிட்ட போது பாண்டியன் செங்கோல் எரிந்தது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறைஉள்ளிட்ட விசாரணை அமைப்புகளால் எதிர்கட்சியினர் மிரட்டப்படுகின்றனர். பாஜக ஆட்சியில் விலைவாசி மட்டும் உயரவில்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025