சீனா தலைநகரில் வெள்ள பாதிப்பு: 33 பேர் பலி, 18 பேர் மாயம்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது, மேலும்

Beijing flood

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 18 பேர் காணவில்லை என்று கூறப்படுகிறது. பெய்ஜிங்கின் வடக்கு பகுதிகளில் தொடர்ந்து கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெய்ஜிங்கின் மேற்குப் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழையால் 59,000 வீடுகள் இடிந்து விழுந்தன, ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று அந்நகரின் அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவின் பிற பகுதிகளும் கடும் வெள்ளப்பெருக்கால் மூழ்கியுள்ளது. வடக்கு சீனா முழுவதும் வெள்ளத்தால் பலர் இறந்ததாக கூறப்படுகிறது. வெள்ள ஏற்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வேறு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.