சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.
கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் மம்தா சர்மா 12 வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் முடிவு தாமதமாகும். மேலும், கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வை ரத்து செய்வது தொடர்பான நோட்டீசை சிபிஎஸ்இ-க்கு அனுப்ப தவறிவிட்டதால் வழக்கை ஒத்திவைப்பதாகவும், சிபிஎஸ்இ-க்கு அனுப்ப மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், ஜூன் 1 ம் தேதி 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து அரசு இறுதி முடிவு எடுக்க உள்ளதாக அரசு முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது என நீதிபதிகள் மனுதாரரிடம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா..? என்பது குறித்து இன்று தெரியவரும்.
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…
சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…