அமெரிக்காவானது ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. அமெரிக்கா விதியின் படி, அந்நாடு பொருளாதார தடை விதித்துள்ள ஒரு நாட்டுடன் இன்னொரு நாடு பொருட்கள் வாங்கி வந்தால், பொருள் வாங்கிய நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடையை விதிக்கும்.
இந்தியாவானது, ரஸ்யாவிடம் இருந்து எஸ்.400 என்கிற 5 வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு கடந்த 2018ஆம் ஆண்டே ஒப்பந்தம் போட்டது. அதன்படி, முதற்கட்ட தொகையாக இந்திய மதிப்பில் ரூபாய் 6000 கோடியை சென்ற ஆண்டு இந்தியா ரஸ்யாவிடம் செலுத்தியுள்ளது. அதன் மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் ரூபாய் 37,500 கோடியாகும்.
இதன் காரணமாக அமெரிக்காவானது இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் சூழல் நிலவுகிறது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ் கூறுகையில்,’ அமெரிக்க பொருளாதார தடைகள் சட்டத்தின்படி ரஸ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து போர் தளவாடங்கள் வாங்குகிற நாடுகள் மீதும் இந்த பொருளாதார தடை சட்டம் தொடரும்.
அமெரிக்காவிடம் சிறந்த தொழில்நுட்பங்களும், ராணுவ தளவாடங்களும் இருக்கின்றன. அமெரிக்க வான்பாதுகாப்பு ஏவுகணைகள் வாஷிங்டனை மட்டுமல்ல இந்தியாவையும் பாதுகாக்கும். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா சென்று வந்த பிறகு இரு தரப்பு வர்த்தகமானது இந்திய மதிப்பில் சுமார் 1½ லட்சம் கோடி ரூபயை ( 20 பில்லியன் டாலர் ) தாண்டியுள்ளது. என அமெரிக்க துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ் கூறியுள்ளார்.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…