இன்று நாடாளுமன்றம் செல்வாரா ராகுல்காந்தி.? மக்களவை செயலகம் முக்கிய ஆலோசனை.!

மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
2 மற்றும் அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்க முடியாது என்பது விதிமுறை என்பதால், ராகுல்காந்தியை வயநாடு எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, ராகுல்காந்தி, தனக்கு விதிக்கப்ட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சூரத் நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர்நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அனால் அங்கு மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்ப்பட்டன.
இதனை தொடர்ந்து ராகுல்காந்தி உச்சநீதிமன்றம் சென்றார், அங்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அங்கு நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியானது. அதில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவு வெளியானது. மேலும் , ஏதன் அடிப்படையில் அவதூறு வழக்கில் அதிகபட்ச தந்தையான 2 ஆண்டுகள் சிறை தண்டனையை மக்கள் பிரதிநிதிக்கு வழங்கப்பட்டது என சூரத் நீதிமன்றத்திற்கு கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தால், மீண்டும் ராகுல்காந்திக்கு எம்பி பதவி வழங்க வேண்டும். அவரது தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் மக்களவை செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதம் மீதான ஆலோசனை இன்று நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றம் செல்வாரா.? அதுவும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!
July 14, 2025