அசாமில் ஒரு சிறுமியை ஐந்து ஆண்கள் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது.
அசாமில் ஒரு சிறுமியை ஐந்து ஆண்கள் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத 5 ஆண்கள் ஒரு சிறுமியை அடித்து சித்திரவதை செய்கின்றனர். இந்த சம்பவம் எங்கு நடந்தது, எப்போது நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள 5 குற்றவாளிகளின் புகைப்படங்களையும் அசாம் காவல்துறை வெளியிட்டுள்ளது.
மேலும், பொதுமக்களிடம் இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு இந்த குற்றவாளிகளைப் பற்றிய ஏதேனும் தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேரை, காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கற்பழிப்பு மற்றும் தாக்குதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கர்நாடகா காவல் ஆணையர் கமல்நாத் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவின் காட்சிகளைப் பகிர்ந்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து வியாழக்கிழமை அசாம் காவல்துறை தகவல் அளித்தது. இந்த வீடியோ மற்றும் விசாரணையின் அடிப்படையில், இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கற்பழிப்பு மற்றும் தாக்குதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…