குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி படேல் என்ற பெண், டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். இவர் வெளியிடும் வீடியோக்கள் அதிக லைக்ஸ் மற்றும் அதிக கமெண்ட்ஸ்களை பெற்றுவரும். இந்நிலையில், அதற்காகவே அந்த பெண் வித்தியாசமான முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் ஆந்தை ஒன்றை கையில் பிடித்த படி வெளியிட்டுருந்தார். அதுவே தற்போது ஒரு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த வீடியோ மீது தற்போது வனத்துறை அதிகாரிகளின் கவனம் பெற்றுள்ளது. என்னவென்றால் ஆந்தைகள் இரவு நேரங்களில் மட்டும் வெளியே சென்று உலவும். அது மரப்பொந்துகள், மலையையொட்டியுள்ள காடுகளில் வாழும் குணமுடையதாகும்.
இந்நிலையில், ஆந்தைகளை அழிக்கப்படும் போது, குடியிருப்புகளில் உள்ள மரங்களில் தஞ்சம் அடைகின்றன. அவையும் வெட்டப்படும் போது, தங்க இடம் கிடைக்காமல் வீடுகளை நோக்கி, ஆந்தைகள் வரத் துவங்கிவிடும். இவை சிறிய வகை பாம்புகள், எலிகள், பூச்சிகள், ஓணான்களை தின்று வாழும் இயல்புடையது. இதனிடையே கீர்த்தி படேல் கூகை என்ற வகை கொண்ட ஆந்தையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். கூகை ஆந்தை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்று. இதனால் அந்த பெண் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள இவ்வகை ஆந்தையை அவர் வைத்திருந்தது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…