இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால, வெளிமாநிலங்களில் மற்றும் மாவட்டங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள் பேருந்து வசதி இல்லாமல் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்து கடந்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்து இடம்பெயரும் தொழிலாளர்கள், ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் தங்களது சொந்த ஊர் மற்றும் கிராமங்களுக்கு செல்வதற்காகக் குவிந்துள்ளனர். மேலும் டெல்லியில் இருந்து நடைபயணம் மூலமே அவர்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்கிறார்கள்.
அந்த வகையில் டெல்லியில் உள்ள தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி செய்யும் பணியை செய்து வந்த 39 வயதுடைய ரன்வீர் சிங் மத்திய பிரதேசத்திலுள்ள மொரோனா மாவட்டத்திற்கு நடந்தே செல்ல திட்டமிட்டுள்ளார். டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சாலையில் விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கடைக்காரர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…