உலக நாடுகளை கடுமையாக நிலைகுலைய வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை இந்தியாவிலும் விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 2069 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொரோனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க உலக வங்கி இந்தியாவிற்கு அவசர கால நிதியாக தற்போது 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியினை, நோயாளிகளை கண்டறிதல், தனி படுக்கை வசதிகளை உருவாக்குதல், கொரோனா குறித்த ஆய்வுகள் மற்றும் மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு இந்த நிதி உதவும் என்று உலக வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…