உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கு திட்டம்..! இந்தியாவில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

உலகின் மிக பெரிய தானிய சேமிப்புக் கிடங்கை இந்தியாவில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கூட்டுறவு துறையில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் மூலம் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் 2,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டத்தை மேற்பார்வையிட, மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா குழு ஒன்றை அமைத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்த முடிவு எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்தும், இந்தத் திட்டம் உணவு தானியங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு நியாயமான ஊதியத்தை உறுதி செய்யவும், பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்று கூறினார்.
மேலும், இந்தியா ஆண்டுதோறும் 3,100 லட்சம் டன் தானியங்களை உற்பத்தி செய்கிறது. ஆனால் போதிய சேமிப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக தானியங்கள் வீணாகின்றன, இதனால், விவசாயிகள் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் என்று அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025