இதற்கான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு!

TANGEDCO

தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிப்பதிற்கான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க மின்வாரியம் உத்தரவு

தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிப்பதிற்கான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்துார் முருகன் கோயில், திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் தெரு வீதிகளில், கேபிள் முலம் மின் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

2022 ஏப்ரலில் நடந்த தேர் திருவிழாவில், தேரின் மேல் பகுதியில் மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்; இச்சம்பவத்தை அடுத்து, மாநிலம் முழுவதும் முக்கிய கோயில்களில் தேர் செல்லும் பாதைகளில், மின் கம்பத்திற்கு மாற்றாக, தரை அடி கேபிள் வாயிலாக, மின் வினியோகம் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

TANGEDCO
TANGEDCO [Imagesource : Twitter]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்