நீங்கள் தேசபக்தர்கள் இல்லை தேசத்துரோகிகள்..! மக்களவையில் ராகுல் காந்தி காரசார வாதம்..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தற்போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய விவாதம் இரண்டாவது நாளாக இன்று தொடர்கிறது.
அதன்படி, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றினார். மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், தன்னை மீண்டும் மக்களவை உறுப்பினராக மீண்டும் அமர்த்திய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நான் கடந்த முறை அதானியை பற்றி பேசியது உங்களை காயப்படுத்தியிருக்கலாம். அதனால் உங்கள் மூத்த தலைவர் வேதனைப்பட்டார். அந்த வலி உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்று நான் அதானியைப் பற்றி பேசவில்லை.
எனவே, பாஜக நண்பர்கள் பயப்பட தேவையில்லை என்று கூறிய ராகுல் காந்தி, னது பாரத் ஜோடோ யாத்திரை குறித்து பேசினார். பாரத் ஜோடோ யாத்ரா இன்னும் முடிவடையவில்லை, நீங்கள் ஏன் யாத்திரையை தொடங்குகிறீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் ஏன் யாத்திரையைத் தொடங்கினேன் என்பது கூட எனக்குத் தெரியாது.
நான் யாத்திரை தொடங்கும் போது, தினமும் 10 கிமீ ஓடினால் 25 கிமீ நடப்பது பெரிய விஷயமில்லை என்று என் மனதில் இருந்தது. ஆனால் இன்று அதைப் பார்க்கும் போது, திமிராக உள்ளது. அப்போது என் மனதில் கர்வம் என நினைத்தேன். ஆனால், அதனால் 2-3 நாட்களுக்குள், என் முழங்கால்கள் வலிக்க ஆரம்பித்தன என்று கூறினார்.
இதன்பின் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச ஆரம்பிக்கையில், எதிர்க்கட்சிகள் முழக்கமிடத் தொடங்கியது. முழக்கம் சற்று குறைந்ததும் சில நாட்களுக்கு முன்பு, நான் மணிப்பூர் சென்றேன். நமது பிரதமர் இன்று வரை மணிப்பூர் மாநிலத்திற்குச் செல்லவில்லை, ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியா அல்ல என்று கூறினார்.
இலங்கை அனுமனால் எரிக்கப்படவில்லை, ராவணனின் ஆணவத்தால் எரிக்கப்பட்டது. ராவணனை அழித்தது ராமன் அல்ல, அவரது ஆணவம். ராமாயணத்தில் கும்பகர்ணன் மற்றும் மேகநாதனின் பேச்சை மட்டுமே ராவணன் கேட்டார்.
இன்று அமித்ஷா மற்றும் அதானியின் பேச்சுகளை மட்டுமே கேட்கிறார் மோடி. அந்த ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை. மணிப்பூர் முதல் நூஹ் வரை நாடு முழுவதையும் நீங்கள் எரித்துவிட்டீர்கள். நான் ‘மணிப்பூர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.
ஆனால் மணிப்பூர் இனி இருக்காது என்பதே உண்மை. மணிப்பூரை இரண்டாகப் பிரித்து விட்டீர்கள். மணிப்பூர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து உடைத்துவிட்டீர்கள் என்று கூறினார். மேலும், பாஜகவின் அரசியல் மணிப்பூரை கொல்லவில்லை. மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டது.
மணிப்பூரில் அவர்கள் இந்தியாவை கொன்றுவிட்டனர். மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம், நீங்கள் பாரத மாதாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் இல்லை. தேசத்துரோகிகள். நீங்கள் பாரத மாதாவின் பாதுகாவலர்கள் அல்ல என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான தனது உரையில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ராஜஸ்தான் செல்வதற்காக நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதையடுத்து ராகுல் காந்தியின் பேச்சு மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025