காரை நிறுத்தி விபத்தில் சிக்கிய நபரை தூக்கிவிட்ட ராகுல் காந்தி..! வீடியோ உள்ளே..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும் , நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.
மேற்கண்ட கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்
இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதற்கிடையில், இன்று காலை நாடாளுமன்றம் செல்வதற்காக தனது வீட்டில் இருந்து வெளியே வந்த போது, சாலையில் கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டியை பார்த்து, காரை நிறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தூக்கிவிட்டுள்ளார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“आपको चोट तो नहीं लगी?”
रास्ते में जाते समय @RahulGandhi जी ने देखा कि एक स्कूटर चालक बीच सड़क पर गिर गया है।
वे गाड़ी रुकवाकर चालक के पास गए और उसका हाल पूछा।
जननायक ❤️ pic.twitter.com/aCeDGAMOlY
— Congress (@INCIndia) August 9, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025