இளம் நடிகை அளித்த பாலியல் புகார் உண்மையா? மவுனம் களைத்த யூடியூபர் ஹர்ஷா சாய்.!

நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் உறவு கொண்டதுடன், அவரது நிர்வாண புகைப்படங்களை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

harsha sai

ஹைதராபாத் : ஆந்திரா, தெலங்கானாவில் பிரபல யூடியூபராக வலம் வரும் ஹர்ஷா சாய் மீது, ஹைதராபாத் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இளம் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு கொண்டதுடன், அவரது நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி ரூ.2 கோடி வரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இவ்வாறு அந்த நடிகை ஹைதராபாத் நரசிங் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், தற்போது போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, நரசிங்கி போலீசார், நடிகையை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வைத்துள்ளனர், முடிவுகள் வெளியான பின், கூடுதல் விவரங்கள் குறித்து தெரிய வரும்.

ஏழை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து வந்த ஹர்ஷா சாய், இப்படி செய்துருக்கவே மாட்டார் என பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஹர்ஷா சாய் கொடை வள்ளலாக வலம் வரும் நேரத்தில் இப்படி புகார் எழுந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மவுனம் களைத்த யூடியூபர் ஹர்ஷா சாய்

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஹர்ஷா சாய், “இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பணம் பறிப்பதற்காக கூறப்படுகின்றன. என்னைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். விரைவில் உண்மை வெளிவரும்” என்று ஹர்ஷா சாய் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்த்துப் போராடுவேன் என்று கூறிய அவர், இனிமேல் இது குறித்து தனது வழக்கறிஞர் விளக்கம் அளிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

harsha sai insta story
harsha sai insta story [image -@harshal_sai instagram]

யார் அந்த இளம் நடிகை?

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்த இளம்பெண் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஹர்ஷா சாயை ஒரு தனியார் விருந்தில் சந்தித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

ஹர்ஷா சாய் யார்?

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஹர்ஷா சாய் யூடியூப்பில் மனிதாபிமான வீடியோக்களுக்கு பெயர் பெற்றவர். யூடியூப்பில் பல்வேறு மொழிகளில் சேனல் வைத்துள்ளார்.

ஹர்ஷாசாயின் புகழ் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் அதிகமாக வளர்ந்துள்ளது.  குறிப்பாக ஏழை மக்களுக்கு உதவியதன் மூலம் நல்ல புகழைப் பெற்றுள்ளார். அவர் ஏழைகளின் தேவைகளைபூர்த்தி செய்து, அதனை வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

காசு, டி.வி., ஃப்ரிட்ஜ் என எதைக் கேட்டாலும் திடீர் ஆச்சரியத்துடன் வழங்குவதில் வல்லவர். இதனாலேயே, அவருக்கு YouTube மற்றும் Instagram போன்ற தளங்களில்  ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நாளுக்கு நாள் அவரது ஃபாலோயர்ஸ் அதிகரித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
Chief pilot Ikrom Rifatli Fami Zainal - co-pilot Maitri Shithole
Rishabh Pant
Train Accident
Optimus Gen-2
MSDhoni
Kavarepet Train Accident - Madurai MP Su Venkatesan