கனமழை எதிரொலி; புதுச்சேரியின் மாஹே பகுதியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

புதுச்சேரி பிராந்தியத்துக்கு உட்பட்ட மாஹே பகுதியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருவதால், அங்கு கண்ணூர் பகுதிக்கு அருகிலுள்ள, புதுச்சேரி பிராந்தியத்துக்கு உட்பட்ட மாஹே பகுதியில் அனைத்து கல்வி கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக கண்ணூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் பெய்துவரும் கனமழையில், புதுச்சேரியின் மாஹே பகுதியில் மட்டும் 221 மி.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலைமையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மாஹேயில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025